COVID-19 Health Champions

கோவிட்-19 தொற்றுக் காலத்தின் போது நியூஹாமை பாதுகாப்பாக வைத்திருத்தல்

கோவிட்-19, மற்றும் அதற்குப் பிரதிச்செயலாற்றும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நியூஹாமில் உள்ள நம் அனைவரிடமும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கோவிட்-19 சுகாதார சாம்பியன்கள் நெட்வொர்க் ஆயிரக்கணக்கான நியூஹாம் குடியிருப்பாளர்கள் கோவிட்-19 பற்றிய சமீபத்திய ஆலோசனை குறித்த நாளது தேதி வரையிலான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க இயலச்செய்கிறது. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிற சமுதாய உறுப்பினர்களுக்கு வைரஸ் பற்றிய சமீபத்திய தகவல்களைப் புரிந்துகொள்ள உதவும் விதமாக சமீபத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை கவுன்சில் உங்களுக்குத் தெரிவிக்கும்.

தெளிவான தகவல்களை அறிந்திருப்பதன் மூலமும் பகிர்வதன் மூலமும், நீங்கள், உங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமுதாயமும் தகவலளிக்கப்பட்ட தேர்வுகளை மேற்கொள்ள முடியும்.

ஒரு கோவிட்-19 சுகாதார சாம்பியனாக ஆகுங்கள்

கோவிட்-19 சுகாதார சாம்பியன்கள் என்போர் நியூஹாமில் வசிப்பவர்கள் ஆவர். சாம்பியன்கள் சமுதாயத்தில் உள்ள யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அனைவருக்கும் தெரிந்த நம்பகமான நபராக நீங்கள் இருக்க வேண்டும். இது உங்களுக்கு முதல் முறையாக இருந்தாலும் கூட, உங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவ விரும்புகின்ற ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்.

  • ஒரு சாம்பியன் ஆவதற்கு புகுபதிகை செய்கிறீர்கள்.
  • நாங்கள் சாம்பியன்களுக்கு கோவிட்-19 பற்றிய சமீபத்திய தகவல்களைத் தெரிவிக்கிறோம்.
  • சாம்பியன்கள் இந்தத் தகவல்களை அவர்களுடைய சமுதாயத்தில் உள்ள அனைவருடனும் அவர்கள் விரும்பும் வழியில் பகிர்கிறார்கள்.
  • எது பயனளிக்கிறது மற்றும் எது பயனளிப்பதில்லை என்பதை சாம்பியன்கள் எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.

நியூஹாமில் உள்ள அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பதை உறுதிசெய்ய நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் ஒன்றுசேர்ந்து செய்ய முடியும். இது நடைபெறுவதற்கு உங்கள் பங்களிப்பை வழங்கியதற்கு நன்றி.

கோவிட்-19 சுகாதார சாம்பியனுக்கான பதிவுப் படிவம்

நமது கோவிட்-19 சுகாதார சாம்பியன் கூட்டங்கள்

வாராந்திர தகவல் அமர்வுகள்: புதன்கிழமை இரவு 7 – 8 மணி. நீங்கள் பதிவு செய்தவுடன் உள்நுழைவு வசதி உங்களுக்கு அளிக்கப்படும்.

பின்பற்ற வேண்டிய கூடுதல் தேதிகள்

கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்ய

தொலைபேசி: 02033732777

மின்னஞ்சல்: [email protected]